மேலும் செய்திகள்

சொத்தை அபகரிக்க கணவருடன் அண்ணி கள்ளத்தொடர்பு இளம்பெண் பரபரப்பு புகார்

குலசேகரம் இட்டக வேலியைச் சேர்ந்தவர் பத்ம ராஜ்(வயது41). இவருக்கும் ஆற்றூரைச் சேர்ந்த விஜயராணி(29) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது விஜயராணி குடும்பத்தினர் பத்மராஜிக்கு ரூ.2 லட்சம் ரொக்கமும், 51 பவுன் நகையும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. திருமணமான 2 வாரத்திலேயே கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.
 பின்னர் குடும்பத்தினர் அவர்களை சமரசபடுத்தி சேர்த்து வைத்தனர். அதன் பின்பும் அவர்களுக்குள் பிரச்சினை மூண்டதால் விஜயராணி பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பின்பு அவர் இது பற்றி திருவட்டாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் கணவர் வீட்டில் அவரது அண்ணன் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். அவரது அண்ணி செல்வி தன்னை கொடுமை படுத்துகிறார். இதை கணவர் பத்மராஜ் தட்டி கேட்பதில்லை. மாறாக அண்ணி செல்விக்கு ஆதரவாக பேசுகிறார். மேலும் என் கணவருக்கும் அவரது அண்ணிக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது. எனவேதான் எங்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுகிறது. இதை தீர்த்து வைக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக விஜயராணியும் அவரது கணவர் பத்மராஜூம் தனித் தனியாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜயராணி நேற்று திடீர் என தனது உறவினர்கள் மற்றும் அப்பகுதி அரசியல் பிரமுகர்களுடன் கணவர் பத்மராஜ் வீட்டுக்கு சென்றார். இவர்கள் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பத்மராஜூம், அவரது அண்ணன் குடும்பத்தாரும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து விஜயராணி கணவன் வீடு முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து திருவட்டார் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விஜயராணியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் கணவர் பத்மராஜீன் வீட்டு கதவின் பூட்டை உடைத்து விஜயராணியை உள்ளே அனுப்பி வைத்தனர். நேற்று இரவு கணவன் வீட்டில் தங்கிய விஜயராணி இன்று காலையிலும் கணவன் குடும்பத்தார் வீட்டுக்கு வராததால் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார். அண்ணியுடன் கணவருக்கு இருக்கும் கள்ளத்தொடர்பை கை விட்டு என்னுடன் குடும்பம் நடத்த வேண்டும் என்று அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த சம்பவம் இன்றும் திருவட்டாறு பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. திருவட்டார் பெண்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமா இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். போராட்டம் பற்றி விஜயராணி நிருபர்களிடம் கூறியதாவது:- என் கணவருக்கு 7 ஏக்கர் ரப்பர் தோட்டமும், சொந்த வீடும் இருக்கிறது. இந்த சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என்றே அவரது அண்ணனும், மனைவியும் என் கணவர் வீட்டில் தங்கி உள்ளனர். கணவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை அவரது அண்ணி தன் பெயருக்கு மாற்ற முயற்சிக்கிறார். இதற்காக யாரும் செய்ய துணியாத காரியத்தை செய்து வருகிறார். திருமணமாகி நான் புகுந்த வீட்டுக்கு வந்த நாள் முதல் என் கணவரை என்னுடன் சேர விடாமல் அவர் தடுத்து வந்தார். இதற்காக என் கண் எதிரிலேயே என் கணவருக்கு அவரது அண்ணி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். இது சரிதானா? என்று கணவரிடம் சத்தம் போட்டேன். அவரது அண்ணியையும் திட்டினேன். அதற்கு அவர் முத்தம் கொடுத்தற்கு என்னை திட்டுகிறாயா? என்று கேட்டு என்னை அடித்தார். மேலும் இதை விட மோசமாகவும் எனக்கு நடக்க தெரியும் என்று கூறி மிரட்டினார். நான் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். ஆனால் ஒரு நாள் நான் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது என் கணவரும் அவரது அண்ணியும் அறைக்கதவை திறந்து போட்டப்படி உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர். இதை கண்டதும் எனக்கு தலைசுற்றியது. மயங்கி விழுந்து விட்டேன். என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கிருந்து பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். மீண்டும் நான் கணவர் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டேன். அதற்கு என் கணவரின் அண்ணி என்னை வீட்டை விட்டு வெளியே விரட்டியதோடு என் கணவரோடு அவர் தான் குடும்பம் நடத்துவார் என்று கூறிவிட்டார். என் கணவர் எனக்கு வேண்டும். சொத்துக்காக அவரோடு கள்ள உறவில் ஈடுபடும் அண்ணியை விரட்டி விட்டு என்னோடு குடும்பம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes