மேலும் செய்திகள்

பிரபாகரன் யாரென்று கேட்டால் காஷ்மீரிகளில் பத்தில் ஒன்பது பேர் சொல்வார்கள்; அவரொரு ’விடுதலைப் போராளி’! பிரபல காஷ்மீர் பத்திரிகையாளர் தெரிவிப்பு

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஈரோட்டில் கடந்த 27 ஆம் தேதி, தேசிய உரிமைகளுக்கான கூட்டமைப்பு ஈரோட்டில் நடத்திய மாவீரர் நாள் நிகழ்வில் காஷ்மீர் குறித்த கருத்தரங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வும் நடைபெற்றது
.


நிகழ்ச்சி மேடையில் காஷ்மீரில் இருந்து வருகை தந்திருந்த பிரபல பத்திரிகையாளரான திரு செளகத் அவர்களிடம் ஒரு குழந்தைக்கு பேர் வைக்குமாறு கூறிய போது. அவர், ’பிரபாகரன்’ என்று பெயர் சூட்டினார் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, காஷ்மீரின் சிறிநகரில் இருந்து பத்திரிக்கையாளர் திரு. செளகத் அகமத் கலந்துகொண்டார்
அக்கூட்டத்தில் திரு . செளகத் அவர்கள் தொடர்ந்து பேசுகையில்,

”பிரபாகரன் யாரென்று கேட்டால் காஷ்மீரிகளில் பத்தில் ஒன்பது பேர் சொல்வார்கள் - அவரொரு ’விடுதலைப் போராளி’ என்று” என கூறினார். மேலும் காஷ்மீர் தேசிய இன விடுதலை போராட்டத்திற்கும் ஈழ தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள ஒற்றுமையையும், காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்தும் விரிவாக பேசினார். இக் கூட்டத்திற்கு புலிப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் தோழர். கொளத்தூர் த.செ.மணி, தோழர். பூ.சந்திரபோசு, தோழர். ரவிக்குமார், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தோழர். கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

புலிப்பாண்டியன் தன்னுடைய உரையில், ”ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான நம் உறவுகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் என்பது, இந்த பேரழிவை நடத்திமுடித்த சிங்கள, இந்திய அரசுகளை எதிர்ப்பதே ஆகும். 21 ஆம் நூற்றாண்டு தேசிய விடுதலைக்கான சகாப்தமாக இருக்கின்றது
உலகெங்கும் உள்ள பல்வேறு போராளி இயக்கங்கள் தம் தேசத்தின் விடுதலைக்காகப் போராடி வருகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தில் சிக்குண்டுள்ள பல்வேறு தேசிய இனங்களும் தம் விடுதலைக்காகப் போராடி வருகின்றன.

அதிலும், அண்மைக்காலமாக காஷ்மீர் விடுதலைப் போராட்டம் தன்னுச்சத்தை அடைந்துள்ளது” என்றும் ஒடுக்கப்படும் இனங்கள் எல்லாம் ஒன்று கூட வேண்டும். இறுதியாக ”தமிழீழ விடுதலைப் போரில் பெண்கள்” என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes