மேலும் செய்திகள்

மனைவியின் தங்கையுடன் 8 ஆண்டுகள் தொடர்பு: வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்ததால் தீர்த்து கட்டினேன்

April 27, 2011
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் செட்டியப்பன் நகரை சேர்ந்தவர் சரவணன். தள்ளுவண்டியில் அசைவ உணவு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
 பூர்ணிமாவின் பெற்றோர் இவர்களது வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். பூர்ணிமாவுக்கு ரூபிணி என்ற தங்கை இருந்தார். ஆசிரியர் பயிற்சி முடித்த அவர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் ரூபிணியை நேற்று சரவணன் கொடுவாளால் வெட்ட முயன்றார். இதை அவர் தனது வலது கையால் தடுத்தார். அப்போது 3 விரல்கள் துண்டாகி கீழே விழுந்தது. பின்னர் மீண்டும் வெட்ட முயன்ற போது ரூபிணி தனது இடது கையால் தடுக்க முயன்றார். அப்போது இடது கை மணிக்கட்டுடன் வெட்டுப்பட்டு கீழே விழுந்தது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த சரவணன், ரூபிணியின் தலையை துண்டித்து கொலை செய்தார்.
இதையடுத்து ரூபிணியின் தந்தை மத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது 2-வது மகள் ரூபிணியை சரவணன், அடிக்கடி 2-வது திருமணம் செய்து வைக்க கோரி மிரட்டியதாகவும், அதற்கு மறுத்தால் உங்களை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ரூபிணியை கொலை செய்த சரவணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. தனது அக்காவான பூர்ணிமாவை, ரூபிணி அடிக்கடி பார்க்க வந்த போது அவர் மீதும் சரவணனுக்கு ஆசை ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து சரவணன், தனது மனைவி பூர்ணிமாவிடம் உன் தங்கையை எனக்கு திருமணம் செய்து வை என்று கேட்டு இருக்கிறார்.இதோடு இல்லாமல் மாமனாரிடமும் சென்று திருமணம் செய்து வைக்க கேட்டார்.
இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததும் உங்களை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். இதையடுத்தே ரூபிணி கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. கைதான சரவணன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், எனது கொழுந்தியாள் ரூபிணிக்கும் 8 ஆண்டுகள் தொடர்பு இருந்தது. இதையடுத்து அவளை 2-வது திருமணம் செய்து வைக்க என் மனைவி, மாமனார் ஆகியோரிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர். இந்நிலையில் ரூபிணிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர்.
இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஒருவழியாக கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவவீரருடன் ஜூன்- 6 ந்தேதி ரூபிணிக்கு திருமணம் நடப்பதாக நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து ரூபிணியை அடைய வேண்டும் என்ற ஆத்திரம் அதிகம் ஏற்பட்டது.தொடர்ந்து எனது மனைவி, மாமனார் என்னை அலட்சியம் செய்தனர். இதனால் நான் ரூபிணியை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள் என்று கேட்டேன். அதற்கு அவள் எனக்கு திருமண நிச்சயம் ஆகி விட்டது என்று கூறினாள். நான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை.
இதனால் எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று நான் கொடுவாளால் ரூபிணியை வெட்டினேன். இதில் தடுக்க முயன்ற அவளது 2 கைகளையும் வெட்டினேன். வெறி தீராத நான் ரூபிணியின் தலையை வெட்டி கொலை செய்தேன். என்று வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes