மேலும் செய்திகள்

விறுவிறுப்பான முயல் ஓட்டப் போட்டி! (காணொளி, பட இணைப்பு)

ஐரோப்பிய நாடுகளில் புதிதாக அறிமுகமாகி வரும் ஒரு வினோதமான விளையாட்டு தான் இது.


முயல் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் சேர்ந்து தமது செல்லப்பிராணிகளை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதற்காக இந்த விளையாட்டை உருவாக்கியுள்ளனர்.

எண்பதாம் ஆண்டுகாலப் பகுதியில் சுவீடனில் ஆரம்பமான இந்த முயல் போட்டி விளையாட்டுக்கள் இப்போது பல ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருவதோடு பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கும் ஒரு கண்கவர் நிகழ்வாகவும் மாறி வருகின்றது.



ஓட்டம், தடைதாண்டி ஓட்டம், வேலிகளுக்கு மேலாகப் பாய்ந்து ஓடுதல் என பல பிரிவுகளைக் கொண்டதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.




இம்முறை ஜெர்மனியில் இடம்இபற்ற இந்தப் போட்டியில் ஸ்னூபி என்ற கறுப்பு வெள்ளை முயல் சகலரது கவனத்தையும் ஈர்த்தது.




சுமார் இரண்டு அடி உயரத்தை அநாயாசமாகத் தாண்டி ஸ்னூபி சாகச வீரனாகத் தெரிவானது.



இந்த நிகழ்வை நடத்துவதற்காக ஜெர்மனியில் முயல் ஆர்வலர்கள் உருவாக்கியுள்ள அமைப்பு jena bunny hopping club என்று அழைக்கப்படுகின்றது.



ஸ்கென்டினேவிய நாடுகளில் தொடங்கிய இந்த முயல் விளையாட்டு இப்போது ஐரோப்பா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகின்றது
.


0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes