மேலும் செய்திகள்

பெண் ஊழியர் கடத்தி கொலை! உடல்களை வெட்டி“டிரங்கு” பெட்டியில் வீசிய கொடூரம்.

April 26, 2011
மதுரை விராட்டிபத்து இருளாண்டித்தேவர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் லதா (வயது 23) இவர் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார்
.
இவருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணசேகரனுக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்து இறந்தது. இந்த நிலையில் மருந்து கடைக்கு கடந்த 20-ந்தேதி வேலைக்கு சென்ற லதா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து குணசேகரன், லதாவின் அண்ணன்கள் ஆகியோர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகர் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில் மதுரை- தேனி மெயின் ரோட்டில் உள்ள செக்போஸ்ட் அருகேயுள்ள கால்வாயில் ஒரு “டிரங்க்” பெட்டி கிடப்பதாகவும், அதில் இருந்து பிணவாடை வீசுவதாகவும் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து செக்போஸ்டில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது “டிரங்க்” பெட்டியில் ஒரு பெண் பிணத்தின் கால் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று “டிரங்க்” பெட்டியை கைப்பற்றி திறந்து பார்த்தனர்.
அதில் 23 வயது மதிக்கத்தக்க இளம் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணத்தை மடக்கி வைத்து பூட்டி இருந்தது தெரியவந்தது. அந்த பெண் சுடிதார் அணிந்து இருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் காணாமல் போன லதாவின் உறவினர்களை போலீசார் அழைத்து சென்று பார்த்தபோது அது காணாமல் போன லதாதான் என தெரியவந்தது. பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லதாவை ஒன்றுக்கு மேற்பட்ட மர்ம மனிதர்கள் கடத்தி கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் குடும்பத்தில் ஏதும் பிரச்சினையால் கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த இளம்பெண் கொலையில் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் முருகதாஸ் தலைமையில் ஒரு தனிப்படையும், சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படையும் அமைக் கப்பட்டு உளள்ளது.
இவர்கள் தேனி, திண்டுக்கல், சிவக்கை ஆகிய மாவட்டங்களுக்கு சென்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். லதா வேலை பார்த்த மருந்து கடையிலும் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes