மேலும் செய்திகள்

தற்கொலை தீவிரவாதியாக மாறிய 12 வயது சிறுவன்; உடலில் குண்டை வெடித்து 4 பேரை கொன்றான்

May 2, 2011
ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் செய்து வரும் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்
. இதற்காக வாலிபர்களை பயன்படுத்தி வந்த அவர்கள் தற்போது சிறுவர்களையும் அதில் ஈடுபடுத்த தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் பக்திகா மாகாணம் உள்ளது. அங்கு மக்கள் நெருக்கம் மிகுந்த மார்க்கெட்டில் நேற்று தற்கொலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அதில் 4 பேர் உடல் சிதறி பலியானார்கள். அவர்கள் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணும் அடங்குவர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அங்கு மனித குண்டாக மாறி பொது மக்களை கொன்றவன் 12 வயது சிறுவன் என தெரிய வந்தது. இவன்தான் தற்கொலை தீவிரவாதிகளில் மிகவும் வயது குறைந்தவன் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தற்கொலை தீவிரவாதிகள் குறித்து உளவுத் துறையினர் கணக்கெடுப்பு நடத்தினர். அதில் பக்திகா மாகாணத்தில் மட்டும் சுமார் 150-க் கும் மேற்பட்டோர் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 13 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். ஒன்றும் அறியாத சிறுவர் களையும், இளைஞர்களையும் தற்கொலை தீவிரவாதிகளாக மாற்றிவரும் தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes