மேலும் செய்திகள்

நடேசன், புலித்தேவன் சரணடைவு! பாலிதவின் குட்டு அம்பலத்தால் பரபரப்பு

இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப்புலிகளின் தலைவர்களை வெள்ளைக்கொடியுடன் சரணடையுமாறு புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனுக்கு, பாலித கொஹன்ன எழுத்து மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் தகவல் அனுப்பியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளன.

அவுஸ்ரேலியா மற்றும் இலங்கைக்கான இரட்டைக்குடியுரிமை பெற்றவரான பாலித கொஹன்ன அரசின் சார்பில் இந்தத் தகவலை புலித்தேவனுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

புலித்தேவன், ஐரோப்பிய நடுநிலையாளர் ஊடாக நிபந்தனையின்றி சரணடைய முன்வருவதாக பாலித கொஹன்னவிற்கு கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பாலித கொஹன்ன 2009 ஆம் ஆண்டு மே, 17 ஞாயிறு காலை 8.46 மணியளவில் மூன்றாம் தரப்பினூடாக புலித்தேவனுக்கு எழுத்துமூல தகவல் அனுப்பியுள்ளார்.

அந்த தகவல் பின்வருமாறு,


“இப்போது படையினரைச் நோக்கிச் செல்லுங்கள். மெதுவாக! ஒரு வெள்ளைக்கொடியுடன். வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுங்கள். படைவீரர்கள் தற்கொலைக்குண்டுதாரிகள் குறித்து மிரண்டு போயுள்ளனர்“ என அந்தத் தகவல் அமைந்திருந்தது.

இந்தத் தகவலைத் தொடர்ந்து மறுநாள் காலை 6.30 மணியளவில் புலித்தேவன், மற்றும் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 15 பேர் வெள்ளைக்கொடியை தலைகளுக்கு மேலால் ஏந்தி வந்துள்ளனர்.

வெள்ளைக்கொடிகளை இவர்கள் ஏந்தி வருவதை தனது இரு கண்களால் அவதானித்ததாக யுத்தவலயத்தில் இருந்த இலங்கையிலிருந்து தப்பியோடிய தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த நபரது பெயர் வெளியிடப்படவில்லை. வெள்ளைக் கொடியுடன் வந்த இவர்களை டிரக் வண்டிகளுக்கு பின்னால் படையினர் அழைத்துச் சென்றனர்.

மணல் திட்டுக்கு பின்னால் இவர்களை அழைத்துச் சென்றதால் அங்கு என்ன நடக்கிறது என்பதை அவதானிக்க முடியவில்லை என்று இந்த நபர் தெரிவித்துள்ளார். அதேவேளை படையினர் துப்பாக்கியால் சுடுகின்ற சத்தத்தை கேட்க முடிந்தது.

அவர்கள் சத்தமிட்டு கத்தினர். இயந்திரத் துப்பாக்கிச் சத்தம் போல் வேகமாக சுடும் சத்தம் கேட்டதாக குறித்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குறித்த அவுஸ்திரேலிய ஆங்கில ஊடகம் இலங்கையின் முன்னாள் வெளியுறவுச் செயலாளராக இருந்த பாலித கொஹன்னவிடம் கேட்டடபோது, விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் தான் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் என்ற வகையில் எனக்கு எந்த ஒரு பயங்கரவாதியும் சரணடைவது தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடும் அதிகாரம் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஒருபோதும் இருக்கவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறியுள்ளேன்.

அந்தக் குழு சரணடைய முயற்சிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. விசாரணைக்கு பதில் அளிப்பதாகவே அந்த தகவல்கள் இருந்தன. அது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எவரிடம் இருந்தும் வந்ததாக இருக்கவில்லை. சரணடையும் முயற்சி ஒன்றுக்கான ஏற்பாடாகவும் அது இருக்கவில்லை. அதைச் செய்யும் அதிகாரமும் எனக்கில்லை.

என்னுடைய புரிந்துணர்வின் படி பொதுவாக இப்படித்தான் சரணடைதல்கள் இடம்பெறும்.இதுதான் நான் வழங்கக் கூடிய ஆலோசனையும் கூட என்று பாலித கொஹன்ன தெரிவித்துள்ளார்.

பாலித்த கொஹன்ன மூன்றாம் தரப்புக்கு அனுப்பிய தகவலை புலித்தேவன் சரணடைவது பற்றி அனுப்பியிருந்ததற்கு பதிலாகவே அமைந்திருந்தது என்பதை அவுஸ்திரேலிய ஊடகமான ஹெரால்ட் மூன்று சுயேச்சை மூலங்கள் ஊடாக ஊர்ஜிதம் செய்துள்ளது.

இந்தச் செய்தி புலித்தேவனுக்கு அனுப்பப்பட்டது.

பேச்சுவார்த்தைகளில் முக்கியப் புள்ளியாக கொஹன்ன கருதப்பட்ட அதேவேளை புலிகள் சரணடையத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது இலங்கை அரசினதும் இராணுவத்தினதும் சகல உயர் மட்டத்துக்கும் தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

புலிகளின் சரணடைதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை ஜனாதிபதியும்,பாதுகாப்புச் செயலாளரான அவரின் சகோதரரும் அறிவித்திருந்தார்கள் என்று நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியாக வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு இராணுவத்தை நோக்கி மெதுவாக வருமாறு அறிவுறுத்தப்பட்டது.

சரணடைதலை ஏற்றுக் கொள்ளுமாறு கொழும்பிலுள்ள நோர்வேத் தூதுவர் அடிக்கடி இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்களுடன் தொடர்பு கொண்டவராகவே காணப்பட்டார் என்று அமெரிக்கத் தூதரக கேபிள் தகவல்கள் மூலம் கசிந்த விடயங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

ஆனால் சரணடையும் விடுதலைப்புலிகள் விடயத்தில் வழமையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவர்களைத் தீர்த்துக்கட்டுமாறு களத்தில் உள்ள கட்டளையிடும் அதிகாரிக்கு உத்தரவு வழங்கப்பட்டது
விடுதலைப்புலிகள் அவர்களின் ஏனைய சகாக்களால் கொல்லப்பட்டதாகவும் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கையில் மட்டுமே ஈடுபட்டதாகவும் இலங்கை அரசு கூறுகின்றது.

பொது மக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இராணுவம் நடந்து கொண்டதாக பாலித்த கொஹன்ன அண்மையில் பாதுகாப்புச் சபையில் பேசும் போதும் தெரிவித்துள்ளார்.

புலித்தேவனும் நடேசனும் எப்படி இறந்தார்கள் என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் ஹெரால்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.
.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes