மேலும் செய்திகள்

மாவீரர் நாள்: கனடா காட்டிய ஒற்றுமை கடல் கடந்து செல்லுமா? - கலாநிதி ராம் சிவலிங்கம்


ஒருங்குபட்ட பொதுக்கட்டமைப்பின் கீழ் மாவீரர் நாளை முன்னெடுப்பதற்கு கனடாவில் உடன்பாடு ஏற்பட்டிருப்பது போல் பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் ஒருங்கிணைவுக்கு வரவேண்டும் என கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை முன்னெடுப்பது தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகள் குறித்து கனடா காட்டிய ஒற்றுமை கடல்கடந்து செல்லுமா எனும் தனது கருத்துரையிலேயே இதனை கலாநிதி ராம் சிவலிங்கம் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துரையின் முழுமையான விபரம் :
மாவீரர் நாள்: கனடா காட்டிய ஒற்றுமை கடல் கடந்து செல்லுமா?
சிங்கள அரசுகளின் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை குறிப்பாக இன அழிப்பை சிங்களக் குடியேற்றத்தைஇ தொன்மைமிகு எம் கலாச்சாரத்தை அழிக்கும் அவர்கள் செயலை எதித்து சத்தியாக்ககிரகம் இருந்தோம்இ ஊர்வலங்கள் நடாத்தினோம் உண்ணாவிரதம் இருந்தோம் மனித சங்கிலியை அமைத்து உண்மைநிலையை உலகுக்கு விளக்கினோம்.
சிங்கள் அரசுக்கு எமது எதிர்ப்பைப் பல விதத்தில் பல்வேறு கோணங்களில் இருந்து கூறினோம். ஆனால் விளங்கும் நிலையில் அவர்கள் இல்லை. அதே வேளை நீதிவேண்டும் உலகிடமும் நியாயம்கேட்டோம் எமது நிலையைப் புரியும் சூழலில் அவர்களும் இருக்கவில்லை.
அநீதியின் அந்தத்துக்கு சென்ற சிங்கள அரசின் செயற்பாட்டை எதிர்த்து நீதிக்காக ஆயுதம் எடுத்துப் போராடினோம். உண்மை நிலையை உலகிற்கு விள்க்க விந்தைகள் பல புரிந்தோம். உலகை வியக்க வைத்தோம். வெற்றியின் விளிம்பிற்குச் சென்ற எமது வீரத்தைப் பார்த்த சக்திவாய்ந்த பல நாடுகளின் பொறாமைக்கும் பயத்துக்கும் ஆளானோம். அவர்களின் சூழ்சியால் எமது வெற்றி தாமதமானது.
இரண்டாம் தடவையாக வெற்றியின் விளிம்பை நோக்கி உலகின் ஆதரவுடன் பயணிக்கும் இவ்வேளை வீறுநடைபோடும் எம வீர வரலாற்றில் என்னொரு படிக்கல்லைத் தாண்டவேண்டிய ஓர் சூழ்நிலைக்கு இன்று நாம் தள்ளப்படட்டுள்ளோம்.
அந்தப் படிக்கல்லின் பெயர்தான் ஒற்றுமை. தமிழரை ஆட்டிப்படைக்கும் இந்த ஒற்றுமையின் அர்த்தத்தைஇ அதன் சக்தியை அதன் மகிமையை நாம் அறிவது அவசியமல்லவா? ஆதாரம் காட்டி விளக்குவதே மேல். தமிழரை அழிக்க ஒட்டு மொத்த சிங்களவரும் ஒண்று சேர்ந்து செயற்படுவதே அவர்களின் வெற்றியின் இரகசியம். அதே வேளைஇ எம் இனத்தை அழிவின் பாதையில் இருந்து காப்பாற்றக்கூட எம்மால் ஒன்றுசேர முடியாததே எமது முன்னேற்றத்தின தடைக்கல்.
அதாவதுஇ எம்மை வருத்தி எமது எதிர்ப்பை எமது எதிரிகளுக்கும் வெளி உலகுக்கும் கூறிய நாம் இன்று எம்மை வருத்தித்தான இந்த ஒற்றுமையின் தேவையை அதன் முக்கியத்தை எம்மவர்க்கும் எடுத்துக்கூற வேண்டிய ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். ஒற்றுமையும் தமிழருக்கு ஒர் சத்திய சோதனயா? என் எண்ணி ஏங்கினோம் பார்த்துப் பரதவித்தோம்.
நாடுகடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களும் பிரதிநிதிகளும் மாவீரர் தினம் இருபிரிவாக நடக்கக் கூடாது ஒரே குடையின்கீழ்த்தான் நடைபெற வேண்டுமென எம்மவரை வேண்டி நவ்ம்பர் மாதம் 15ம் நாள் லண்டன் மாநகரில் உண்ணா விரதம் இருந்தனர். அதேவேளை உறுதி பூண்ட தமிழ் உலகம் உறங்காது ஒற்றுமைக்காகப் போரிட்டது.
மாவீரர்கள் யாரப்பா? நீதிக்காகப் போராடினவர்கள் அநீதியை எதிர்த்தவர்கள். எம்மினத்தின் நன்மைக்குத் தம்மை அற்பணித்தவர்கள். போருக்கு அர்த்ததையும் போர்முனைக்கு இலக்கணத்ததையும் த்ந்த மறவர்கள். ஒற்றுமைக்கு முத்லிடம் கொடுத்தவர்கள். மாற்றாரும் போற்றும் வகையில் வாழ்ந்து காட்டிய எம் காவிய நாயகர்கள்.
நாம் காணும் உலகத்தை நாம் அடையவுள்ள இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாடாம் தமிழீழத்தை பெற்றுத்தர வேண்டி பந்தாகச் சுழன்று சூறாவெளியாக மாறி எதிரிகளுக்குத் தக்கபாடம் கற்பித்த எம் இனத்தின் காவல்ர்கள். வீர இனமென்ற பெயரை எமக்குப் பெற்றுத் தந்த பெருமைக்கு உரியவர்கள். தானைத் தலைவனின் தம்பி தங்கையர்கள்.
இந்த ஆயுதம் ஏந்தி அறப்போர் புரிந்த தேடினாலும் கிடைக்காத எம் தேசியத் தலைவரின் செல்வங்களை தமிழரின் வீரத்துக்கு வரவிலக்கணம் தந்த வள்ளல்களை நாம் பூஜிக்கும் எம் தெய்வங்களைப் போற்றிப் புகழஇ அவர்களின் அற்புதம் மிக்க அற்பணிப்பை நினைவுகூர இரண்டு பிரிவுகளாகச் செயல்படுவதா? என ஏங்கித்தவித்த வேளை மனிதஉரிமையை மதிக்கும் கனடா நாட்டிலேஇ மானத்தமிழர்களின் முயற்சியின் பயனால்க் கிடைத்த ஒற்றுமையின் பெயர்தான் இந்த ஒரு குடையின் கீழான கனடா நாட்டில் நடக்கவிருக்கும் மாவீரர்நாள்.
முன்பு மாவீரர் தினத்தைச் செய்தவர்களே இம்முறையும் செய்யவேண்டும் என்ற ஒற்றுமை உலகநாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும்இ சிங்கள தேசத்துக்கு ஓர் சவுக்கடியாகவும்இ உலகெலாம் வாழும் எம்மவர்க்கு ஓர் இனிய செய்தியாகவும் அமையும் இவ்வேளை மற்ற நாடுகளில் வாழும் எம்மவரும்இ தமிழர் அதிகமாக வாழும் நாடுகளில் நான்காவது இடத்தில் இருக்கும் கனடாவைப் போல் ஒற்றுமைக்கு அர்த்ததையும் எம்மவர் நன்மைக்கு முதலிடத்தையும் தர முன்வர வேண்டும்.
மாவீரர் நாள் ஒருகுடையின் கீழ்த்தான் நடாத்தப்பட வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசின் உலகளாவிய முயற்சியும்இ இந்த நிகழ்வை நடாத்துவதில் பக்கசார்பு இல்லாதுஇ ஓற்றுமைக்கு வழி கோலியாக செயற்பட்டதும் அவர்களின் பெருமைமிக்க செயலாகும். நாடு கடந்த தமிழீழ அரசின் இச்செயல் எதிர் காலத்தில் எம்மவர் ஒற்றுமைக்கு வழிகோலும் என்பது திண்ணம்.
இன்று சிங்களத் தலைமையின் நின்மதியைக் குலைத்து அவர்களை ஆட்டிப்படைக்கும் மாவீரர் ஆவி மற்ற நாடுகளிலும் மாயங்கள் புரிந்து எம்மவர் ஒற்றுமைக்கு வழிகோல வேண்டும்.
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆணவத்துடன் ஆட்சிபுரிய வேண்டுமானால். அல்லல்ப்படும் எம் உறவுகள் அமைதியக வாழவேண்டுமானால் எமது ஒற்றுமை அவசியம். கனடாவில் ஆரம்பித்த இந்த ஒற்றுமை உலகெலாம் பரவ வேண்டும். பரவும் ஒற்றுமை எமக்கு வெற்றியைத் தரவேண்டும்.
கலாநிதி ராம் சிவலிங்கம்
துணைப் பிரதமர் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
media@tgte.org

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes