மேலும் செய்திகள்

பிரான்சில் நிரந்தர வதிவிட உரிமையற்றோருக்கான புதிய நடைமுறைகள்


பிரான்சுவா ஒல்லோந்த் தனது தேர்தற் பிரச்சாரத்தில்பெரிய அளவிலான, வதிவிட உரிமையற்றோருக்குஒரேயடியாக வதிவிட உரிமை
 வழங்குவதைஎதிர்திருந்தாலும் தெளிவான சட்டவரையறை மூலமாகவகை பிரித்து தகுதியானவர்களுக்கு நிரந்தர வதிவிடஉரிமை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்.

ஒவ்வொரு நகரக் காவற்துறைத் தலைமை இல்லங்களையும் (Préfecture) ஒருங்கிணைத்து ஒரே சட்டஅடிப்படையில் செயற்பட வைக்கத் தெளிவான சட்ட வரைமுறைகள் வரையப்பட்டுள்ளனஇதனை இன்றுபுதன்கிழமை நகரக் காவற்துறைத் தலைமை இல்லங்களுக்கான சுற்றாக உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ்வெளியிட்டுள்ளார்இது பெரும்பாலான வதிவிட உரிமையற்றோருக்கு வதிவிட உரிமை வழங்குவதற்கு வழி வகுக்கும்.ஆனாலும் ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் வழங்குவதை மட்டுப்படுத்தும் என மனுவல் வால்ஸ் கூறியுள்ளார்இதன்சட்டமூலங்களையும் மாற்றங்களையும் பரிஸ் தமிழ் வாசகர்களுக்குத் தமிழில் தருகின்றோம்இதன் மூலம் எம்வாசகர்கள் பிழையான வழிகாட்டல்களுக்குள் சிக்காமலும் பணவிரயம் செய்யாமலும் சட்டமூலங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இதனைத் தருகின்றோம்.

மனுவல் வால்ஸ் முன்னைய அரசாங்கம் கடைப்பிடித்தது போல் வருடத்திற்கு 30,000 பேருக்கு வதிவிட உரிமைவழங்க முடிவு செய்துள்ளார்இன்னமும் கிட்டத்தட்ட 350,000 பேர் முறையற்ற வதிவிட உரிமையற்றவர்களாகஉள்ளார்கள் என பிரான்சின் உள்துறை அமைச்சுத் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைகள்

பெற்றோர்களுக்கு
 குடும்பமாக உள்ளவர்கள் குறைந்தது 5 வருடங்கள் பிரான்சில் வசித்தமை நிரூபித்தல் வேண்டும்அத்தோடுகுறைந்தது ஒரு பிள்ளையாவது ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் இங்கு பாடசாலையில் கல்விகற்றுக் கொண்டுஇருக்க வேண்டும்முக்கியமாக அந்தப் பிள்ளை பாடசாலையில் ஈடுபாபட்டோடு தகுதியான பெறுபேறுகள்எடுத்திருக்க வேண்டும்.

மாற்றம்: 2006ல் இரண்டு வருடம் பிரன்சில் வசித்திருப்பதோடு பிள்ளை ஒரு வருடம் பாடசாலையில் படித்தால்நிரந்தர வதிவிட உரிமை கோறும் தகுதி வழங்கப்பட்டதுஆனால் அதன் பின்னர் இந்த வகையான நிரந்தர வதிவிடஉரிமை கோறல் முறையில் திட்டவட்டமான சட்டதிட்டங்கள் உருவாக்கப்படவில்லைஇனிமேல் மேற்கண்ட 5 வருடச்சட்டம் அனைத்துப் பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும்.

வதிவிட உரிமை உள்ள ஒரு வெளிநாட்டவரை மணம் முடித்தவருக்கு
 குடும்ப ஒருங்கிணைப்புச் சட்டத்தின் (Regroupement familial மூலம் வதிவிட உரிமை பெறுவதற்கு வதிவிடஉரிமையற்றவர்  ஜந்து வருடம் பிரான்சில் வசித்திருக்க வேண்டும்வதிவிட உரிமை உள்ளவரோடு திருமணப்பதிவிலிருந்து ஆகக் குறைந்தது 18 மதங்களாக ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்முறையானவாழ்க்கைக்கான வருமானம் இருக்க வேண்டும்மணம் முடிக்காமல் நீதிமன்றப் பதிவின் மூலம் (pacséஒன்றாகவாழ்பவர்களும் இச் சட்டம் மூலம் வதிவிட உரிமை கோரலாம்ஆனால் எவ்விதப் பதிவும் இல்லாமல் ஒன்றாகவாழ்பவர்கள் (concubinவதிவிட உரிமை பெறக் கடுமையான நிபந்தகைள் விதிக்கப் படுகின்றனமுக்கியமாகவீடும் வருமானமும் பொதுவாக அனைவர்க்கும் முக்கியமாக அவதானிக்கப்படும்.

மாற்றம்2005ன் சட்டமூலம் 5 வருடக் குடும்ப வாழ்க்கையைக் கோரியிருந்ததுஆனால் இப்போது 18 மாதங்கள்மட்டும் கோரப்படுகின்றது.

வேலை செய்பவருக்கு
வருடங்கள் பிரான்சில் வசித்தமை நிரூபித்தல் வேண்டும்கடைசி இரண்டு வருடங்களில் தொடர்ந்து ஒரு இடத்தில்எட்டு மாதங்கள் வேலைபார்த்துக் கொண்டிருத்தல் வேண்டும்அல்லது 30 மாதங்கள் கடைசி ஐந்து வருடத்தில்தொடர்ச்சியாக வேலை செய்திருத்தல் வேண்டும்தற்போதைய வேலையின் அத்தாட்சிப் பத்திரம் வேண்டும்.வேலைக்கான ஒப்பந்தப் பத்திரம் (un contrat de travailஅல்லது வேலைக்குச் சேர்கப்படுவார் என்ற ஒருநிறுவனத்தின் அல்லது கடையின் உறுதிப்பத்திரம் (une promesse d'embaucheதேவை.

ஏழு வருடங்கள் பிரன்சில் இருந்து கடைசி மூன்று வருடங்களுக்குள் 12 மாதங்கள் வேலை செய்திருந்தால் நகரக்காவற்துறைத் தலைமையகம் (Préfectureநான்கு மாத வதிவிட அனுமதிப்பத்திரம் வழங்கும்இதன் மூலம் வேலைதேடிக் கொள்ளலாம்இது மேலும் ஒரு முறை மட்டுமே நீட்டிக்கப்படும்வேலை தேடிக் கொண்டால்தொடர்ச்சியான வதிவிட உரிமை வழங்கப்படும்ஏனெனில் வதிவிட உரிமை கோருவதற்கு சம்பளச் சீட்டு (Bulletin de paieமுக்கியம்வதிவிட அனுமதியற்றவர்கள் பதிவு செய்யப்படாத வேலை செய்வது நிரூபிக்கப்பட முடியாது.

மாற்றம்2008 ற்கும் 2010 ற்கும் இடையில் வேலை மூலம் வதிவிட உரிமை பெறுவதற்கான நடைமுறையில் பலசுற்றுச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டனமுக்கியமாக பதிவு செய்யப்படாத வேலைகளிலிருந்து வதிவிடஉரிமையற்றவர்கள் ஒழுங்கான நடைமுறையில் வருவதற்கான கதவுகள் திறக்கப்பட்டன. 5 வருடம் வசித்தமையும் ஒரேஇடத்தில் 12 மாத வேலையும் கோரப்பட்டதுஆனாலும் இது ஒவ்வொரு இடத்திலும் பாகுபாடுகளோடும் சமனற்றமுறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதுபுதிய நடைமுறை இவற்றைத் தடுத்து சமமான முறையை ஏற்படுத்தும்.

18 வயது இளைஞர்களுக்கு.

16 வயதிற்கு முதல் பிரான்சிற்கு வந்தவர்களுக்கு அவர்கள் உறவுகள் இங்கு நிரந்தர வதிவிட உரிமையோடுஇருந்தாலும் 16 வயதிலிருந்து தொடர்ச்சியான கல்வியைக் கவனமாகவும் ஆர்வமாகவும் தொடர்ந்திருந்தாலும்நெருங்கிய உறவுகள் பிரன்சில் வசித்தாலும் வதிவிட உரிமை கோர முடியும். 18 வயதிற்குக் குறந்தவர்கள் தனியாகஇருப்பின் 2006 ம் ஆண்டு சட்டத்தின் மூலம் சமூக இளையவர் உதவி மையத்தின் (Aide sociale à l'enfance (ASEமூலம் பொறுப்பெடுக்கப்பட்டு தகுதியுள்ள பயிற்சிக் கல்வி வழங்கப்படும்இந்த இரண்டு பகுதிக்குள்ளும்அடங்கோதோருக்கு அம் மாநகர காவற்துறை அதிகாரி தகுந்த தகுதியான முடிவு எடுப்பார்.

மாற்றம்: இதுவரை 13 வயதுற்கு முன்னர் பிரான்சிற்கு வந்த சிறுவர்களுக்கு மட்டுமே வதிவிட உரிமைவழங்கப்பட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes