மேலும் செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை நீதி வழங்க வேண்டும்! - பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை.



தமிழீழத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இனப் படுகொலையால் தினமும் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கவுரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திர தமிழீழமே தீர்வாக அமையும்.

இதனைத் தமிழீழ மக்கள் 1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் மூலமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்துத் தேர்தல்கள் மூலமும் உறுதியாகத் தெரிவித்துள்ளார்கள்.

தமிழீழ மக்களது இந்த மக்களாணையை சர்வதேச அரங்கில் மீண்டும் வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடாத்தக் கோரி தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கோடி கையெழுத்து இயக்கம் கனடாவில் தமிழீழ மக்கள் அவையினால் தொடரப்பட்டு வருகின்றது.
1995 முதல் விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட இடைக்கால தமிழீழ அரசின் கீழ் தமிழீழ மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், இன – மத பிரிவின்றி, தன்னிறைவு அடைந்த வாழ்வை வாழ்ந்தார்கள். இந்த நேரத்தில் சர்வதேச புவியல் அரசியலில் சிக்குண்டு தமிழீழ அரசு அழிக்கப்பட்டு, தமிழீழமக்கள் மீது இனப் படுகொலை நிகழ்த்தப்பட்டு, மீண்டும் சுதந்திரமற்ற அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள்;.

இன்று ஐக்கிய நாடுகள் சபை தாம் தமிழீழ மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம், சிறிலங்காவில் எமது செயல்பாடு சரியாக இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்வதோடு மீண்டும் இவ்வாறு வேறு எங்கும் நடைபெறாமல் இது தமக்கு ஒரு பாடமாக அமையட்டும் என்று கூறி நிற்கிறார்கள்.

மிக சாதாரணமாக அவர்கள் அறிக்கைள் விட்டு இருக்கிறார்கள். இறந்தவர்கள் எமது மக்கள். இழந்தவர்கள் நாம். மண் இழந்து தாய் இழந்து மொழி கலாச்சாரம் இழந்து உலகம் முழுவதும் அழைக்கிறோம்! இதற்குநீதி தரவேண்டும்!

தாய் – தந்தை – சகோதர – சகோதிரிகளை இழந்து, பிள்ளைகளை இழந்து நடை பிணங்களாக, மன நோயால் பாதிக்கப்பட்ட இனமாக இருக்கும் எங்களுக்கு இதே ஐக்கிய நாடுகள் சபை நீதி தரவேண்டும்!

எமது மக்களின் வாழ்வுரிமையை தீர்மானிக்க வேண்டியவர்கள் நமது மக்களே தமிழர்களே தவிர சர்வதேசமல்ல!

ஆகவே  இன்று தமிழ்நாட்டு மக்களும்  அவர்களுடன்சேர்ந்து எமது கனடிய தமிழீழ மக்களும் 'தனி ஈழமே தீர்வு! ஐ.நா. மன்றமே பொது வாக்கடுப்பு நடத்து' என்று அதற்க்காக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து  தொடர்ந்து வருகின்றார்கள.

அந்த இயக்கத்தில் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை இணைந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையிடமும் அதில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளிடமும் இன்றும் இனப்படுகொலைக்குள் சிக்குண்டு இருக்கும் மக்களிடம் விடுதலைக்கான ஆணையைக் கேட்டும் ஈழத் தமிழர்களிடமிருந்து வலிந்து பறிக்கப்பட்ட தன்னாட்சி உரிமையை அவர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு கோடிக்கு அதிகமாக சர்வதேசம் எங்கும் இருக்கும் தமிழீழ மக்கள்  உலகத்ததமிழர்களாக  உலகமக்களாக இந்த இலக்கை அடையும் செயற்திட்டதில் செயல் படவேண்டும் என்று கோரிக்கை விடும் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை  பிரான்சில் நடைபெறும் மாவீரர் தின மண்டபத்தில்இ தமிழீழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரரையும் மக்களையும் நினைவு கூர்ந்து  'ஒருகோடி கையெழுத்து' போராட்டத்தை பிரான்சில் ஆரம்பித்து வைக்கின்றார்கள்.

 தமிழீழ மக்கள் பேரவை – பிரான்ஸ்

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes