மேலும் செய்திகள்

தமிழீழத்தில் மீண்டும் மக்களை அச்சுறுத்தும் சிறிலங்காவின் இயந்திர கழுகு

கடந்த சில வருடங்களுக்கு தமிழர் பிரதேசங்கும் அச்சுறுத்தம், உயிர் பறிக்கும் இயந்திரமாக சிறிலங்காவின் போர் விமானங்கள் செயற்பட்டன
யுத்ததின் கோரப் பிடிக்குள் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று மீண்டும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர்.


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் போர்க்காலத்தில் பறப்பது போன்று நேற்றும் கிபிர் குண்டு வீச்சு விமானங்கள் பறந்துள்ளன. இதனால் அப்பிரதேச மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  

போர் விமானங்கள் தாக்குதல் நடத்துவது போல வட்டமிட்டு குத்துச் சாய்வாகக் கீழிறங்கி மீண்டும் மேலெழும்பின. 

இதனால் அச்சமடைந்த பாடசாலை மாணவர்கள் பாதுகாப்புத் தேடி மேசைகளின் கீழ் ஒளித்தனர்.

போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் தடவையாக "கிபிர்' விமானங்கள் முல்லைத்தீவு வான் பரப்பில் வட்டமிட்டன. அதன் பின்னர் கடந்த 13 ஆம் திகதி தீபாவளித் தினத்தன்றும் "கிபிர்' விமானங்கள், அப்பிரதேசங்களில் தாழப் பறந்து மக்களை அச்சுறுத்தின. 

இதன் பின்னர் நேற்று திங்கட்கிழமை காலை திடீரெனப் பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு பிரதேசத்துக்குள் நுழைந்த "கிபிர்' விமானங்கள் தாழப் பறந்து வட்டமடித்தன. 

புதுக்குடியிருப்பு, கேப்பாபிலவு, ஆனந்தபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் முல்லைத்தீவுக் கடல் பிரதேசத்திலும் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை அவை பேரிரைச்சலுடன் வட்டமடித்தன.

மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த நேரத்திலேயே கிபிர் விமானங்கள் வட்டமடித்தமையால் மாணவர்கள் வீதிகளில் சைக்கிள்களைப் போட்டுவிட்டு மரங்களின் கீழ் ஒளித்துக்கொண்டனர். மக்களும் பதற்றத்தில் தமது வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓடினர். 

மீண்டும் ஒரு போர்ச் சூழலுக்கு சென்று மீண்டதாக பிரதேசவாசிகள் பீதியுடன் தெரிவித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes