மேலும் செய்திகள்

15 வயது மாணவன் 37 வயது ஆசிரியையால் பாலியல் துஷ்பிரயோகம்

தனது ஆசிரியையால் தான் எப்படி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார் என்பதை 15 வயது மாணவன் ஒருவன் விளக்கியுள்ளான்.சவுத் போர்ட் பிரதேசத்துக்கு அருகில் உள்ள பேர்க்டேள் உயர் பாடசாலையின் விநியோகப் பிரிவு ஆசிரியை ஹினா படேல் அவரது தொலைபேசி இலக்கத்தை ஒரு தாளில் எழுதி இந்த மாணவனின் கரங்களில் திணித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணையின் போது இந்த மாணவன் இரண்டு பிள்ளைகளின் தாயான 37 வயதான மேற்படி ஆசிரியையோடு தனக்கு ஏற்பட்ட நள்ளிரவுஅனுபவத்தை விளக்கியுள்ளான். இந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியையின் பிள்ளைகள் இருவரும் அவர்களது தந்தையின் வீட்டில் தந்தையோடு உறங்கச் சென்றிருந்தனர்.இந்த மாணவனின் வயது கருதி அவனின் பெயர் வெளியிடப்படவில்லை.

மேல் மாடிக்கு எனது கையைப் பிடித்து அழைத்துச் சென்று கட்டிலில் படு மின்சாரப் போர்வை போர்த்திக்கொள்ளும் என்றார்.தற்போது 16 வயதான அந்த மாணவன் தனது அமைதியைக் கலைந்து பேசும் போது நான் மாடிக்குச் சென்று பார்த்தபோது அவரது பிள்ளைகளின் விளையாட்டுப் பொருள்கள் அந்த அறை முழுவதும் பரவிக்கிடந்தன.ஆசிரியையின் அறையிலும் டெடிபெயார்கள் காணப்பட்டன.

அந்த அனுபவம் ஒருவகையில் புதுமையானது.ஒரு ஆசிரியையிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுவதல்ல.அதிகம் பேச்சு இருக்கவில்லை. நேரடியாக காரியத்தில் இறங்கினோம் என்று அந்த மாணவன் கூறினான். தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்து பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 15 வயதான இரு மாணவர்களுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக ஹினா படேல் ஒப்புக்கொண்டுள்ளார்.மாணவர்களுள் பெரும்பாலானவர்கள் இவரை சரசக் காரி என்றே அடையாளம் கண்டிருந்தனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes