மேலும் செய்திகள்

யாழ் .வடமராட்சியில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தின் துன்னாலை வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றில ஆயுதங்களுடன் வீட்டுக்கதவை உடைத்துச் உள்ளே சென்ற 10 இற்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் 20 பவுண் நகை காசு மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசிகள் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி இரவு 9 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சம்பவ தினத்தன்று வீட்டிலிருந்த கணவன், மனைவி, மாமியார் ஆகியோர் உறங்குவதற்கு தயாராக இருந்த நேரம் யாரோ குழுவாக வீட்டை நோக்கி நடந்து வருவதை அவதானித்ததும் தமது கதவுகளை இறுக பூட்டி விட்டு வீட்டினுள்ளே இருந்துள்ளனர்.

கறுப்பு துணியால் முகத்தை மூடி கட்டியபடி தடி, பொல்லு, கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் வீட்டின் முன்கதவை உடைத்தபடி உள்ளே சென்ற ஆயுதாரிகள் உள்ளே இருந்தவர்களை பயமுறுத்தியதுடன் சத்தமிட்டு கத்தியவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

பின்னர் வீட்டை சல்லடைபோட்டு தேடி 20 பவுண் நகை 10 ஆயிரம் ரூபா காசு 2 பெறுமதியான கையடக்கதொலைபேசிகள் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் பருத்தித்துறைப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே மாதத்தின் பின்னர் வடமராட்சியில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes