மேலும் செய்திகள்

திண்டுக்கல்லில் இன்று ஓட்டலில் புகுந்து அ.தி.மு.க. செயலாளர் வெட்டிக்கொலை: போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்தவர்

திண்டுக்கல்லில் இன்று காலை 10.30 மணி அளவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-

திண்டுக்கல் பஸ் நிலையம் எதிரே வடக்கு போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தின் எதிர்புறம் பூ மார்க்கெட் உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் ஓட்டல்களும், கடைகளும் உள்ளன.

இங்கு 2 வாலிபர்கள் ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட ஒரு கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து அவர்கள் இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதை பார்த்ததும் அவர்கள் அருகில் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களும், பக்கத்து கடைக்காரர்களும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

அரிவாளால் வெட்டப்பட்டதில் ஒரு வாலிபர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இன்னொரு வாலிபரின் கை, கால்களில் சரமாரி வெட்டு விழுந்தது. அவர் ரத்தம் சொட்ட, சொட்ட ஓட்டலில் இருந்து வெளியே ஓடிவந்து எதிரே இருந்த போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் குமார் (வயது45), சேரன்மாதேவி அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.

படுகாயம் அடைந்த பன்னீர் செல்வம் தே.மு.தி.க. பிரமுகர் என்பதும், இவர்கள் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மூலச்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலையுண்ட வாலிபர் குமாரும், பன்னீர் செல்வமும் அம்பையில் நடந்த பெருமாள் என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

ஒரு மாதத்திற்கு முன்புதான் நிபந்தனை ஜாமீனில் அவர்கள் விடுதலை ஆனார்கள். திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்த போதுதான் குமார் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையாளிகளில் ஒருவரான கொம்பையன் என்பவன் போலீசில் பிடிபட்டான். ஏற்கனவே கொலையுண்ட பெருமாளின் தம்பி கந்தன் தலைமையில் வந்த 4 பேர்தான் குமாரை வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கந்தன் உள்பட 3 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes