மேலும் செய்திகள்

கையால் பிரபலம் அடைந்த சன்னியாசி

கையால் பிரபலம் அடைந்த சன்னியாசிஇந்தியாவைச் சேர்ந்த சன்னியாசி ஒருவர் கடந்த 38 வருடங்களாக வலது கரத்தை ஒரே நிலையில் நிரந்தரமாக உயர்த்திப் பிடித்த வண்ணம் உள்ளார். இவரின் பெயர் அமர் பாரதி சுவாமி.
 இவரின் உயர்த்தப்பட்ட கரம் சிவபெருமானின் அடையாளமாக பக்தர்களால் நம்பப்படுகின்றது.
அமர் பாரதி 1970 ஆம் ஆண்டு வரை நடுத்த்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து வந்தார்.வீடு, மனைவி, மக்கள், தொழில் என்று இருந்தவர்தான்.
ஒரு நாள் காலை திடீரென்று நித்திரை கலைந்து எழுந்தார். அனைத்தையும் துறக்க துணிந்தார். இனி உள்ள் வாழ்நாள் முழுவதையும் சிவ வழிபாட்டுக்கென அர்ப்பணிக்க தீர்மானித்தார். எல்லா சுகங்களையும் துறந்தார்.
ஒண்டிக் கட்டை ஆனார். வீதிகளில் அலைந்து திரியத் தொடங்கினார். திரிசூலம் ஒன்றை கூடவே வைத்து இருந்தார். உலகியல் இன்பங்களை மனம் இன்னமும் நாடுகின்றது என்பதை மூன்று ஆண்டுகளில் உணர்ந்து கொண்டார்.
உலகப் பற்றுக்களில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்று உறுதி பூண்டார். மற்ற மனிதர்களிடம் இருந்து தனித்து வாழ முடிவெடுத்தார். இதற்காக வலது கரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டார்.
ஆனால் இவர் விரும்புகின்றபோதுகூட இனி மேல் இக்கரத்தை ஒருபோதும் அசைக்கின்றமையோ, மடக்குகின்றமையோ, பயன்படுத்துகின்றமையோ முடியாது.
ஆனால் இவர் உலகத்தில் இடம்பெறுகின்ற யுத்தங்களை கண்டு வெகுவாக வருந்தினார் என்றும் அமைதியின் குறியீடாகவே வலது கரத்தை உயர்த்திப் பிடிக்கத் தொடங்கினார் என்றும் இவரின் பக்தர்கள் விசுவாசிக்கின்றார்கள்.


  
இவரைப் பின்பற்றி சில சன்னியாசிகள் வலது கரத்தை உயர்த்திப் பிடித்த வண்ணம் உள்ளார்கள். ஆனால் கையை ஒரே நிலையில் எப்போதும் உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருக்கின்றமை மிகவும் கடினமான காரியமே.
ஆரம்பத்தில் இது மிகுந்த வேதனையை கொடுக்கத்தான் செய்தது என்றும் தற்போது இவ்வேதனை இல்லாமலே போய் விட்டது என்றும் கூறுகின்றார் அமர் பாரதி

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes