கோவை: திருமணம் செய்ய மறுத்ததால், பிளஸ் 2 மாணவியை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். கோவை அருகேயுள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். தனியார் நிறுவன ஊழியர். மனைவி ஹேமா. மகள் தீபிகா(17), பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன் சதீஷ்(23). எஸ்எஸ்எல்சி படித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் இருந்தார்.
இவர் பெரியண்ணனின் அக்கா கனகலட்சுமியின் பேரன். இவரும், தீபிகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது 2 குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தீபிகா மனம் மாறி சதீஷுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
தீபிகா, பெரியநாயக்கன்பாளையம் ஆர்.வி.நகரில் உள்ள பாட்டி கனகலதா வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். இதையறிந்த சதீஷ், நேற்று அவரது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளும்படி தீபிகாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த தீபிகாவை, சதீஷ் கழுத்தை நெரித்து படுக்கை அறைக்கு தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பாட்டி கனகலதாவை மற்றொரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
கனகலதா அறையின் பின்பக்க கதவை திறந்து வந்து பார்த்தபோது தீபிகா கொல்லப்பட்டது தெரியவந்தது. தப்பிய சதீஷை போலீசார் கைது செய்தனர்



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment