மேலும் செய்திகள்

பிரான்சில் தமிழ் அமைப்புகளின் மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைவு

திங்கட்கிழமை, 02 மே 2011, 11:32.20 AM GMT ]
பிரான்சில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் பிரான்சின் லா ரிபப்ளிக் எனுமிடத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கருகில் இருந்து மே தின ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அதன்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆகி்யோரும் பிரஸ்தாப ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் பிரஸ்தாப ஊர்வலத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோசங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்ததுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களும் ஏந்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் தமிழ், சிங்கள அரசியல் தளங்களில் வெவ்வேறு திசைகளில் இயங்கும் இரண்டு பிரிவினர் ஒன்றாக இணைந்து புலம்பெயர் தேசமொன்றில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கோசங்களை முழங்கியுள்ளமையானது ஆரோக்கியமான அரசியல் நகர்வாகவே கருதப்படுகின்றது.

 

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes