May 2, 2011

இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவருடன் நெருங்கிப் பழகிய இனைஞர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதான வேல்முரு கையா நிஷாலினி என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
சம்பவத்தில் மரணமான யுவ தியும் அவரது தாயும் வீட்டிருந்து சற்றுத் தொலைவிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.குளித்து முடித்துவிட்டு குறித்த யுவதி மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய யுவதியின் தாயார், யுவதி கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டுள்ளார்.இதன் பின்னர் சம்பவம் குறித்து கிராமசேவகருக்கு அறி விக்கப்பட்டது.
கிராமசேவகர் மூலம் ஊர்காவற்றுறை காவற்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைக்காகச் சடலத்தை யாழ்.போதன வைத்தியசாலையில் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டார்.
இதேவேளை இந்த யுவதி யின் காதலன் என்று சந்தேகிக் கப்படும் நபர் கடல்மார்க்கமாகத் தப்பிச்செல்ல முற்பட்டபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனிடையே சம்பவதினத்துக்கு முதல் நாள் பிரஸ்தாப யுவதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். தன்னை ஒருவருடமாக ஒருவர் காதலித்துவிட்டு (தற்போது கைதுசெய்யப்பட்டிருப்பவர்) ஏமாற்றிவிட்டார் எனவும், அவர் தன்னுடன் பலமுறை உடலுறவுகொண்டார் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிவான் குறித்த யுவதியை 28 ஆம் திகதி சட்ட வைத்திய பரிசோதனைக்கு அனுப்பியிருந்தார்.
எனினும் சந்தேக நபர், குறித்த யுவதியுடன் உடலுறவு கொண்டமையை நிரூபிக்க முடியவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே குறித்த யுவதியின் மரணம் சம்பவித்துள்ளது. இவரது மரணம் தற்கொலையா, கொலையா என சந்தேகம் எழுந்துள்ளது
.யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக வைத்தியசாலை தரப்புடன் தொடர்புகொண்டு கேட்ட போது அது தொடர்பாக எந்தவித தகவல்களும் வெளியிட அவர்கள் மறுத்துவிட்டனர்.



Paris Time

Colombo Time


0 கருத்துரைகள்:
Post a Comment