மேலும் செய்திகள்

முன்னாள் முதல்வர் குமாரசாமிதான் என் கணவர்: குட்டி ராதிகா

பிரபல தமிழ் நடிகை குட்டி ராதிகா அரசியல்வாதி ஒருவரை மணந்துகொண்டேன். ஒரு வயதில் எனக்கு குழந்தை இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.தமிழில் குட்டி ராதிகா‘இயற்கை’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இதையடுத்து சில தமிழ் படங்களில் நடித்த இவர், கன்னடத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில், குட்டி ராதிகாவுக்கு கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவருமான குமாரசாமியுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.


இருவருமே இதை மறுத்து வந்தனர். இதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார் ராதிகா. தற்போது 4 வருடங்களுக்கு பிறகு நடிகை குட்டி ராதிகா பெண் குழந்தையுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். இந்நிலையில் கன்னட நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நானும் அவரும் திருமணம் செய்து கொண்டது நூற்றுக்கு நூறு உண்மை.

நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த எனக்கு தற்போது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த மாதம் 23ஆம் தேதி யுடன் குழந்தைக்கு ஒரு வருடம் நிறைவடைய உள்ளது. குமாரசாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவரை திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார்.


இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. எனக்கு திருணம் ஆனதும் நான் லண்டன் சென்று விட்டேன். அவ்வப்போது அவர் வந்து செல்வார். 3 குழந்தைகள் உள்ளனர் என்பதில் உண்மை இல்லை. திருமணம் ஆன பிறகு, நான் பெங்களூர் மற்றும் மங்களூரை விட்டு எங்கும் செல்லவில்லை. மேலும் எனக்கு திருமணம் நடந்த சமயம் மிகவும் சிக்கலான நேரம் என்ற காரணத்தால் நான் திரையுலகை விட்டு விலகி விட்டேன். என்னால் அவருக்கு தொந்தரவு வரக் கூடாது என்பதே என் நோக்கம்.

எனது திருமணத்துக்கு அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லை. வரும் சூழ்நிலையில் இல்லை. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் திரையுலகிற்கு வர விரும்பினேன். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. ‘நடிக்க வேண்டாம். படம் தயாரிக்கலாம்’ என்று கூறிவிட்டார். எனவே படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளேன். ஒரு நல்ல கதை கிடைத்தால் அதில் நானும் நடிக்க தயாராக உள்ளேன். குழந்தைக்கு ஷமிகா கே. சாமி என்று பெயரிட்டுள்ளேன்.இவ்வாறு குட்டி ராதிகா கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes