மேலும் செய்திகள்

ஜேர்மனியில் மாவீரர் படங்கள், நினைவு கல்லறைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீவைப்பு!


ஜேர்மனியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக செய்யப்பட்ட கல்லறைகள், மற்றும் மாவீரர் படங்கள், துயிலும் இல்ல முகப்பு, தமிழீழ வரைபடம், மற்றும் சோடனைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கடந்த இரவு சில விஷமிகள் தீவைத்துள்ளனர் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஜேர்மனி ரெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்சன்கிளப் பார்க் ( கொமர்சியல் பார்க்) என்ற இடத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன.

ஜேர்மன் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரான குஞ்சன் என்று அழைக்கப்படும் புவனேஸ்வரன் என்பவர் வீட்டில் பின்பக்க கராஜில் மாவீரர் நினைவு கல்லறைகளும், மாவீரர் படங்களும் , சோடனைகளும், மாவீரர்நாள் நடைபெறும் இடத்தில் கொண்டுபோய் வைப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது அவ்வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த விஷமிகள் மாவீரர் படங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் தீவைத்துள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரி.சி.சி. என அழைக்கப்படும் ஜேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்தவர்களால் கடந்த சில நாட்களாக தொலைபேசியில் அச்சுறுத்தல் வந்து கொண்டிருந்தாகவும் மாவீரர் நாளை நடத்த விடமாட்டோம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும், புவனேஸ்வரன் காவல்துறையினருக்கு செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
 அச்சுறுத்தல் விடுத்தவர்களின் தொலைபேசி இலக்கம், பெயர் விபரங்களும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
விஷமிகள் மாவீரர் படங்களுக்கும் நினைவுத்தூபிகளுக்கும் தீவைத்த போதிலும் தாம் மீண்டும் தயாரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டிருப்பதாகவும்,
 நாளை திட்டமிட்டபடி முன்சன் கிளப் பார்க்கில் மாவீரர்நாள் நடைபெறும் என்றும் அதில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு ஜேர்மன் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
தாயகத்தில் மாவீரர்நாளை அனுட்டிக்கவிடாது சிறிலங்கா படையினர் தடுத்து வருகின்றனர். மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்துவருகின்றனர்.
 அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் ரி.சி.சி என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் மாவீரர்நாளை நடத்தவிடாது தடுத்து வருவதாகவும் மாவீரர் படங்களுக்கு தீவைத்து வருவதாகவும், விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலகம் குற்றம் சாட்டியுள்ளது
. சிறிலங்கா பேரினவாத படைகளும், ரி.சி.சி என அழைக்கப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினரும் இணைந்து செயற்படுகின்றனர் என்றும் மாவீரர்நாளை நடத்தவிடாது தடுத்து வருகின்றனர் என்றும் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

செய்திகள்

மேலும் செய்திகள்

வெளிநாட்டு செய்திகள்

மேலும் செய்திகள்

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes